/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகளை கூறுவோம் ...- தீர்வு காண்போம் பகுதிக்காக...
/
குறைகளை கூறுவோம் ...- தீர்வு காண்போம் பகுதிக்காக...
குறைகளை கூறுவோம் ...- தீர்வு காண்போம் பகுதிக்காக...
குறைகளை கூறுவோம் ...- தீர்வு காண்போம் பகுதிக்காக...
ADDED : ஜன 11, 2024 04:38 AM
ரோட்டில் பள்ளம்
வேடசந்தூர் நேருஜி நகர் பூங்கா ரோட்டில் பைப் லைன் பதிப்பதற்காக ரோட்டை வெட்டி வைத்துள்ளனர்.இதனால் டூவீலர்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். ரோட்டை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
- -ஆர்.செல்வராகவன், வேடசந்துார்.
விரைவில் சீர் செய்யப்படும்
பைப் லைன் பதிப்பதற்காக துண்டித்துள்ளனர். விரைவில் அது சரி செய்யப்படும்.
-மேகலா,- பேரூராட்சி தலைவர்.
ரோடு சரி இல்லை
காணப்பாடி கால்நடை மருந்தகத்திற்கு செல்லும் ரோடு கப்பி ரோடாக இருப்பதால் சிரமம் உள்ளது.
- --நல்லதம்பி, காணப்பாடி.
பரிந்துரை செய்யப்படும்
ஒன்றிய நிர்வாகத்திடம் ரோடு அமைக்க பரிந்துரை செய்யப்படும்.
--பாண்டி, ஊராட்சி தலைவர், காணப்பாடி.
தெருவிளக்கு வசதி தேவை
ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகர் வடக்கு பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்குகிறது.
-குமரேசன், ஒட்டன்சத்திரம்.
பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
ஒட்டன்சத்திரம் நகராட்சி கஸ்துாரி நகர் பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
-திருமலைசாமி, நகராட்சி தலைவர்.
வாய்க்கால் சேதம்
கோம்பைபட்டி ஊராட்சி கே.அய்யாபட்டி 1வது வார்டு பகுதியில் சிமென்ட் சாலை , கழிவு நீர் வாய்க்கால் சேதம் அடைந்து அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
-சுதாகர், கே.அய்யாபட்டி.
நடவடிக்கை எடுக்கப்படும்
1வது வார்டு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க அளவீடு பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- -தமிழரசி கார்த்திகைச்சாமி, கோம்பைப்பட்டி ஊராட்சி தலைவர்.
கழிவுகளால் அவதி
கொடைக்கானல் வில்பட்டி ரோட்டில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது,
-என். பாலன், வில்பட்டி.
நடவடிக்கை எடுக்கப்படும்
வில்பட்டி ஊராட்சி ரோட்டோரம் இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- -பாக்யலட்சுமி, ஊராட்சி தலைவர், வில்பட்டி.
குப்பை அள்ளப்படுவதில்லை
33 வது வார்டில் கார்த்திக் வித்யா மந்திர் பள்ளி ரோட்டில் குப்பை சரியாக அள்ளப்படுவதில்லை.
-மகேஷ், அடிவாரம்
அள்ள நடவடிக்கை
நகராட்சி ஊழியர்களை வைத்து முறையாக அள்ளப்படும்
- -நடராஜன், கவுன்சிலர்
ரோடு சரியில்லை
பெரியகுளம் மஞ்சலாற்று பாலத்திலிருந்து காளியம்மன் கோயில் வரை மெயின் ரோடு மேடு பள்ளத்துடன் குண்டும் குழியுமாக உள்ளது.
- -பிரபு, வத்தலகுண்டு
சரி செய்யப்படும்
பொங்கலுக்குள் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
-முத்துவீரன்,உதவி பொறியாளர் ,நெடுஞ்சாலை

