/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பசுமையை மீட்க அதிகளவில் மரக்கன்றுகளை வளர்க்கலாமே; நிலத்தை பாழ்படுத்தும் கருவேல மரங்களை அகற்றுங்க

ADDED : டிச 02, 2024 04:51 AM

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது தொடங்கிய மழை நேரங்களை பயன்படுத்தி அதிக இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையை காக்க உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும்.
ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா கண்டங்கள் உள்பட, 129 நாடுகளில் சீமை கருவேல மரங்கள் உள்ளது. 1870ல் சமையலுக்கான எரிபொருளாகவும் பயிர்களுக்கு வேலிகளாகவும் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகமானது. அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக பரவி ஆந்திரா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது.
காலப்போக்கில் எரிபொருள் பயன்பாடு மிகவும் குறைந்த சூழலில், எளிதில் பரவி வளரும் தன்மை கொண்ட இத்தாவரம் விளை நிலங்களிலும், பராமரிக்காமல் விடப்பட்ட நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் செழித்து வளர்ந்துள்ளது.
சீமைக்கருவேல மரங்களை அழிக்க நீதிமன்ற உத்தரவிட்டபோதும் செயல்படுத்தலில் தாமதம் நீடிக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், சில அடி ஆழத்திலேயே நல்ல குடிநீர் கிடைத்தததாக தகவல்கள் உள்ளன. ஆனால் சீமைக்கருவேல மரங்களின் அசுர வளர்ச்சியால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கொடிய நோய் போல் பரவி வரும் இம்மரங்களை,முற்றிலுமாக அழித்து விவசாயம், குடிநீர் மட்டுமின்றி சூழலையும் பாதுகாக்க வேண்டியது தற்போதைய அவசியமாக உள்ளது. மாவட்டம் நிர்வாகம் சமீபத்திய மழை நீரை பயன்படுத்தி, பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்வதை அதிகரிக்க உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.