/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி பயன்பாடில்லாத பூங்காக்களை... செயல்படுத்தலாமே; கோடைகாலம் என்பதால் தற்போதே திறக்கலாமே

ADDED : ஏப் 20, 2025 04:18 AM

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெயிலும் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் வெளியே வரமுடியாதளவிற்கு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் விளையாட, முதியவர்கள் நடைபயணம் மேற்கொள்ள என ஒரே இடமாக இருப்பது பூங்காக்கள் தான். ரோடு விரிவாக்கம் என்ற பெயரில் பெரும்பாலான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பதால் பூங்காக்களை தவிர நடைபயணங்களுக்கு வேறு மாற்று இடமே இல்லை. ஆனால் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களோ பெரும்பாலும் பராமரிப்பின்றி உள்ளன.
புதர் மண்டி இருத்தல், வேலை நடக்கிறது என பூட்டி வைத்தல், பராமரிப்பு, பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பூங்காக்கள் செயல்படாமல் உள்ளன. பெரும்பாலான அம்மா பூங்காங்களும் பராமரிப்பின்றி கேட்பாரற்று உள்ளன. மாவட்டத்தில் 11 ஊராட்சிகளில் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டு வீணாகி உள்ளது.இது மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பூங்காக்களின் நிலமை படுமோசமாகத்தான் உள்ளது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் மதுபான பார்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி செயல்படுகின்றன. அரசு மதுபான பார்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்கு கொடுப்பதில்லை. பூங்காக்களை சீரமைத்து நவீன வசதிகளை ஏற்படுத்தி கட்டணம் வசூலித்தால் அரசுக்கு வருமானம் வரும் என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.