/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூனை எந்த பக்கம் விழுகிறது பார்ப்போம் முன்னாள் அமைச்சர் சீனிவாசன்
/
பூனை எந்த பக்கம் விழுகிறது பார்ப்போம் முன்னாள் அமைச்சர் சீனிவாசன்
பூனை எந்த பக்கம் விழுகிறது பார்ப்போம் முன்னாள் அமைச்சர் சீனிவாசன்
பூனை எந்த பக்கம் விழுகிறது பார்ப்போம் முன்னாள் அமைச்சர் சீனிவாசன்
ADDED : மார் 17, 2026 02:28 AM
திண்டுக்கல்-: கரூர் துயர சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை நடக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்த கேள்விக்கு பூனை நிற்கிறது எந்த பக்கம் விழுகிறது என பார்ப்போம் என்றார்.
திண்டுக்கல்லில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க.,வுக்கு 3-ம் கிடைக்கும் என தெரிவித்திருப்பது பொய். அந்த கருத்துக்கணிப்பை மக்கள் பொய் ஆக்குவார்கள். கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். சட்டசபை தேர்தலில் 210 இடங்களில் அ.தி.மு.க., தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும். முதல்வராக பழனிசாமி பதவி ஏற்பார். கரூரில் தி.மு.க., கூடாரம் அமைத்து மக்களை அடைத்து வைத்துள்ளனர். அதனால் கலெக்டர், எஸ்.பி.,யை மாற்ற வேண்டும் என மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதை தொடர்ந்து எஸ்.பி., மாற்றப்பட்டுள்ளார். இதிலிருந்து அந்த தகவல் உண்மை என தெரிகிறது. கரூர் துயர சம்பவத்தின்போது மருத்துவமனைக்கு அனைவரும் வந்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை சி.பி.ஐ., விசாரணைக்கு அழைத்திருப்பது குறித்து நீங்களும், நானும் பதில் சொல்ல முடியாது. போலீஸ் விசாரணை நடக்கிறது. பூனை நிற்கிறது எந்த பக்கம் விழுகிறது என பார்ப்போம்., என்றார்.

