ADDED : மார் 17, 2026 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று சுட்டெரித்த வெயிலுக்கு பின் மதியம் மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவியது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. நேற்று காலை வெயில் சுட்டெரித்த நிலையில் மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது பனியின் தாக்கத்தால் வெடவெடக்கும் குளிர் நிலவுகிறது. இதமான சூழலை அனுபவித்தபடி சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

