/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அக்கறை காட்டலாமே: சுகாதாரமற்ற பொதுக்கழிப்பறைகளால் தொற்று: பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்தவே தயக்கம்

ADDED : ஜன 16, 2025 05:50 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரமற்ற பொதுக்கழிப்பறைகளால் தொற்று பரவும் நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ள இதனை பயன்படுத்தவே மக்கள் தயக்கம் காட்டும் நிலை தொடர்கிறது.
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. மத்திய அரசின் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இட வசதி உள்ளவர்களுக்கு தனிநபர் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தனி நபர் கழிப்பறை கட்ட வசதி இல்லாத வீடுகளுக்கு பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இன்னும் பல உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான இடங்களில் சமுதாய சுகாதார வளாகங்கள் அமைக்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் இதற்கான இடம் இல்லாததால் கட்டப்படாமல் உள்ளது.
தனிநபர் கழிப்பறை,சமுதாய சுகாதார வளாகங்கள் இல்லாத பகுதிகளில் திறந்த வெளியே கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரோட்டோரங்கள், வாய்க்கால் வரப்புகள், ரயில்வே தண்டவாளங்கள், வெட்ட வெளி இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுக் கழிப்பறையில் தண்ணீர் பற்றாக்குறை, சுத்தமின்மை காரணங்களால் இவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர்.
இவற்றை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கழிப்பறை இல்லாத இடங்களில் பொது கழிப்பறைகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளியால் ஏற்படும் தீமைகள், தொற்று நோய்கள் குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.