நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: வரும் 10ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ரேக்ளா போட்டிக்கு பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்தனர்.
ஆனால், அதற்கு போலீசார் தடை விதித்தனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய பா.ஜ.,வினர் போட்டி நடத்த அனுமதி பெற்றனர். ஆனால், போட்டி நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து போலீசாருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே நேற்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 34 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர்களை போலீசார் விடுதலை செய்தனர்.