/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குஜிலியம்பாறையில் நுாலக கட்டடப்பணி
/
குஜிலியம்பாறையில் நுாலக கட்டடப்பணி
ADDED : ஜூன் 22, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: மத்திய, மாநில அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 46 நுாலகங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 40 நுாலகங்களுக்கான பணி நடைபெற்று வரும் நிலையில் 23 நுாலக கட்டடங்கள் பணி முடிந்து திறக்கப்பட்டுள்ளது .
குஜிலியம்பாறை ஒன்றியம் துலுக்கம்பாறை, லந்தகோட்டை ஊராட்சி லந்தக்கோட்டை, கோட்டநத்தம் ஊராட்சி சேர்வைக்காரன்பட்டி ஆகிய மூன்று இடங்களில் தலா ரூ .22 லட்சம் மதிப்பில் புதிய நுாலகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.
கருங்கல் ஊராட்சி கருங்கல்லில் ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இடம் இல்லாததால் நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.