/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உரம் கடத்தல், பதுக்கினால் உரிமம் ரத்து; வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

ADDED : ஜூலை 16, 2025 01:19 AM
திண்டுக்கல் : '' விற்பனை முறைகேடு, உரம் கடத்தல், பதுக்கல் செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுதோடு உர உரிமம் ரத்து செய்யப்படும்'' என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாண்டியன் கூறியதாவது: சாகுபடி பயிர்களுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் , தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உர உரிமம் பெற்ற மொத்தம் ,சில்லரை விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, கொள்முதல் செய்யவோ கூடாது.
மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.