/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு தொந்தரவு தந்த தொழிலாளிக்கு ஆயுள்
/
சிறுமிக்கு தொந்தரவு தந்த தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : மே 14, 2025 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி செல்வத்துக்கு 40, ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வத்தலகுண்டு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நிலக்கோட்டை கருப்பமூப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி செல்வம் பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.11 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி வேல்ருகன் தீர்ப்பளித்தார்.