sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆடி, ஓடி வரும் காவிரிதாய்

/

ஆடி, ஓடி வரும் காவிரிதாய்

ஆடி, ஓடி வரும் காவிரிதாய்

ஆடி, ஓடி வரும் காவிரிதாய்


ADDED : ஆக 03, 2025 04:41 AM

Google News

ADDED : ஆக 03, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடி மாதம் 18ம் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளை தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்க தேவையான நீரை போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளை தேர்ந்தெடுத்தனர். இந்த விழா தற்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம்.

நகை வாங்க உன்னத நாள் ஆடி 18 ல் காவிரியில் நீராடி காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். அட்சய திரிதியை விட ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால் புண்ணியம் எப்படி பெருகுகிறதோ அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால் ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.

அனைத்துமே சிறப்பு காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கை கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். தமிழர்களாகிய அனைவரும் இந்நாளில் தங்கள் இல்லத்தை அலங்கரித்து பூஜை புனஷ்காரங்களுடன் இந்நாளை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் விவசாயம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆரம்பிக்கலாம். குறிப்பாக இந்தாண்டின் ஆடிப் பெருக்கு கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளது.

தாலி கயிறு பிரித்து மாற்ற உகந்த நாள் திவ்யா முத்துக்குமார், குடும்பத் தலைவி, ஒட்டன்சத்திரம்: ஆடி மாதம் பிறந்தாலே கொண்டாட்டம்தான். ஆடி மாதத்தை கொண்டு தான் பண்டிகைகள் தொடங்குகின்றன. இந்த மாதத்தை கணக்கிட்டு பண்டிகைகள், வழிபாடுகள், பூஜைகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன. அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி அம்மனை வணங்குவார்கள். ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடி பதினெட்டாம் பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில்களுக்கு சென்று அம்மனை வழிபடுவோம். ஆடி பதினெட்டு அன்று நீர் நிலைகளில் பெருக்கெடுத்து காவிரித்தாய் கரைபுரண்டு ஓடுவது கண் கொள்ளா காட்சி ஆகும். விவசாயம் முதல் அனைத்து தொழில்கள், செயல்கள் செய்வதற்கு ஆடி 18 மிகவும் சிறப்பான நாள். அன்று என்ன துவங்குகிறோமோ அது ஆடிப்பெருக்கு போல் பெருகும். தாலி கயிறு பிரித்து மாற்றுவார்கள். ஏதாவது ஒரு ஆற்றில் குளித்து அங்குள்ள கோயிலுக்கு சென்று வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். மங்களகரமாக அன்றைய தினம் மஞ்சள் வாங்கினால் சிறப்பானதாக இருக்கும். புதுமணத் தம்பதிகளை அழைத்து ஆடிப்பெருக்கென்று புத்தாடைகள், தங்க ஆபரணங்கள் வழங்கி விருந்து வைத்து மகிழ்வர்.

நதிக்கு பூஜை செய்து வழிபாடு சதீஷ் குருக்கள், விநாயகர் கோயில், அக்ரஹாரம். அ. கலையம்புத்துார், பழநி : ஆடி விழாக்கள் அனைத்தும் திதி நட்சத்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இருக்கும்.ஆனால் ஆடிப்பெருக்கு விழா மாதத்தின் நாட்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைந்துள்ளது. இது இந்த விழாவின் தனித்துவம். இந்த நாளில் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை கொண்டாடும் விதமாக ஆற்றங்கரையில் மக்கள் ஒன்று கூடி நதிக்கு பூஜைகள் செய்து வழிபடுவர். முளைப்பாரி எடுத்து படையல் இட்டு வழிபாடு செய்வார்கள். புதுமண பெண், சுமங்கலி பெண்கள் புது தாலி மாற்றிக் கொள்வார். தேங்காயில் துளையிட்டு அதில் வெல்லம் பருப்பு தானியங்கள் சேர்த்து நெருப்பிலிட்டு வேகவைத்து சுவாமிக்கு படையல் வைப்பர். கருப்பண்ண சுவாமி , கன்னிமார் தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வது இல்லை. ஆனால் ஆடிப்பெருக்கு அன்று புதிய வியாபாரம் துவங்குவர்.

அறுசுவை உணவுடன் உபசரிப்பு குமுதவள்ளி, குடும்பத்தலைவி, பண்ணைக்காடு : ஆடி 18 யை முன்னிட்டு குல தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு படையல் வைத்து வழிபாடு செய்வது, குல மக்களுக்கு அன்னதானம் செய்வது, புதுமண தம்பதிகளுக்கு புத்தாடை எடுத்து கொடுத்து அறுசுவை உணவு படைத்து கொண்டாடுவது சிறப்பு. ஆடி பெருக்கை முன்னிட்டு தாலி பெருக்கி கட்டுதல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு, வளையல் வழங்கும் நிகழ்வும் இந்த நாளில் நடக்கும்.






      Dinamalar
      Follow us