/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வயல்வெளிகளில் மது பாட்டில்கள் ; விவசாயிகள் புகார்
/
வயல்வெளிகளில் மது பாட்டில்கள் ; விவசாயிகள் புகார்
ADDED : நவ 26, 2024 05:50 AM
பழநி: பழநி வயல்வெளிகளில் மது பாட்டில்களை உடைத்து வீசி செல்வதாக விவசாயிகள் புகார் கூறினர்.
பழநி சப் கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் லீலாவதி தலைமை வகித்தார். சப் கலெக்டர் உதவியாளர் முத்துசாமி, தாசில்தார் பிரசன்னா கலந்து கொண்டனர்.
விவசாயிகள் விவாதம்:
ரங்கநாதன், மிடாபாடி: செடிகளில் வைரஸ் நோய் தாக்குதல் உள்ளது.
சப்கலெக்டர் உதவியாளர்: வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
பாரதி, ஆயக்குடி: பழநி வயல்வெளிகளில் மது பிரியர்கள் மது பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். இதனால் விவசாய பணியாளர்கள் பாதிக்கின்றனர்.
சப் கலெக்டர் உதவியாளர்: தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சக்திவேல், பெரியம்மாபட்டி: அரசு உபரிநிலங்களுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டும். காட்டு விலங்குகள் பயிரை சேதம் செய்கிறது.
சப் கலெக்டர் உதவியாளர்: தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகேசன், பெரியம்மா பட்டி: மயானம் செல்லும் பாதையை சிலர் அடைத்துள்ளனர்.
சப்கலெக்டர் உதவியாளர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.