/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கைதிகளுக்கு எழுத்தறிவு தேர்வு
/
கைதிகளுக்கு எழுத்தறிவு தேர்வு
ADDED : பிப் 17, 2026 06:59 AM
திண்டுக்கல்: பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் 15 வயதுக்கு மேல் எழுத படிக்க தெரியாத நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த திட்டம் சிறை கைதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு எழுத்தறிவை பரிசோதிக்க தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட சிறையில் எழுத படிக்க தெரியாத 24 கைதிகள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு தன்னார்வலர் மூலம் தினமும் ஒரு மணி நேரம் வீதம் 6 மாதங்களாக எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.
எண்களை அறிதல், எழுதுதல், படித்தல் ஆகியவை கற்று கொடுக்கப்பட்டன. இதையடுத்து மாவட்ட சிறையில் அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட்டது.
முதன்மை கல்வி அலுவலர் உஷா, உதவி திட்ட அலுவலர் திருப்பதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயலெட்சுமி பார்வையிட்டனர்.

