/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மானிய விலையில் கால்நடை உலர் தீவனங்கள்.. தேவை அரசின் கருணை! விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு வழி காணுங்க

ADDED : செப் 04, 2024 07:04 AM

மாவட்டத்தில் விவசாயமே பிரதானம் என்ற நிலையில் 90 சதவீதம் விவசாயம் சார்ந்த தொழிலுடன் கால்நடை வளர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. விவசாயிகளின் தற்சார்பு வாழ்க்கை முறை மெல்ல மெல்ல மாறிவரும் நிலையில் கால்நடை வளர்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. வடகிழக்கு பருவமழைக்குப்பின் சில மாதங்கள் நீடிக்கும் பனிப் பொழிவால் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் வளர்வதில் சிக்கல் உள்ளது.
இதனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடைகளின் வளர்ப்பு பாதியாக சரிந்துள்ளது. இதனால் தொழு உரமின்றி மண் வளம் பாதித்து வருகிறது. இயற்கை விவசாயமும் கேள்விக்குறியாகி விட்டது. கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்த கால்நடை துறையின் மூலமாக கால்நடை வளர்ப்பிற்கு தேவையான வைக்கோல், சோளத்தட்டை, கடலை கொடி, தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினால் கால்நடை வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படும்.
இதனால் விவசாய பரப்பும் அதிகரித்து ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் கிடைக்க வழிவகை ஏற்படும்.இதற்கு அரசு கால்நடைகளுக்கான தேவையான உலர் தீவனங்களை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.