/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானல் சிறுவர் பூங்காவுக்கு பூட்டு
/
கொடைக்கானல் சிறுவர் பூங்காவுக்கு பூட்டு
ADDED : ஜன 07, 2024 06:57 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் கலையரங்கம் அருகே சிறுவர்கள் மகிழும் விதமாக பொழுது போக்கு அம்சத்துடன் சில ஆண்டுக்கு முன் சிறுவர் பூங்கா கட்டமைக்கப்பட்டது. கட்டணத்துடன் செயல்பட்ட பூங்காவில் வசதிகளில்லாத நிலை, சிறுவர்கள் பயன்படுத்தும் சறுக்கு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில், புதர் மண்டியதால் பயணிகள் முகம் சுளித்தனர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சில மாதத்திற்கு முன் பூங்காவை பூட்டியது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
விரைவில் சீரமைப்பு
செல்லத்துரை, நகராட்சி தலைவர் : சிறுவர் பூங்காவை தனியார் பராமரிப்பு செய்தனர்.
இங்குள்ள பொழுது போக்கு உபகரணங்கள் சேதத்தால் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு கருதி பூட்டப்பட்டுள்ளது.
பூங்காவை பராமரித்து சீர் செய்ய விரைவில் பணிகள் துவங்க உள்ளது என்றார்.