/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாடாய்படுத்தும் லொடக்கு பஸ்கள் ஐலேசா போட்ட மாணவர்கள்
/
பாடாய்படுத்தும் லொடக்கு பஸ்கள் ஐலேசா போட்ட மாணவர்கள்
பாடாய்படுத்தும் லொடக்கு பஸ்கள் ஐலேசா போட்ட மாணவர்கள்
பாடாய்படுத்தும் லொடக்கு பஸ்கள் ஐலேசா போட்ட மாணவர்கள்
ADDED : பிப் 14, 2024 05:11 AM

நத்தம் : நத்தம் பஸ் ஸ்டாண்டில் பழுதாகி நின்ற அரசு லொடக்கு பஸ்சை பள்ளி மாணவர்கள் தள்ளி செல்ல ஸ்டார்ட் ஆகி சென்றது.
மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ், நத்தம் பஸ் ஸ்டாண்ட் முதல் பெரியார் பஸ் ஸ்டாண்ட் இடையே தினசரி சென்று வரும். இந்தநிலையில் நேற்று மாலை நத்தம் பஸ் ஸ்டாண்ட் வந்த இந்த பஸ் வழக்கம்போல் பழுதாகி ஸ்டார்ட் ஆகாமல் நின்றது. டிரைவர் ,நடத்துனர் அறிவுறுத்தல் படி பஸ்சிலிருந்த பள்ளி மாணவர்கள் தள்ள ஸ்டார்ட் ஆனது . அரசு பஸ்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் அடிக்கடி பழுதாகி நிற்பது தொடர்கதையாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் , வேலைக்கு செல்லும் பலரும் நேரத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கின்றனர். விபத்து அபாயமும் உள்ளதால் லொடக்கு பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.