தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ லோகோ உருவாக்கம்: சாதித்த மாணவர்கள்

லோகோ உருவாக்கம்: சாதித்த மாணவர்கள்

லோகோ உருவாக்கம்: சாதித்த மாணவர்கள்


ADDED : ஆக 16, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., செவிலியர் கல்லுாரி மைதானத்தில் நடந்த செவிலியர் மாநில மாநாட்டில்

மனித உருவாக்கம் மூலம் 3256 செவிலியர் மாணவர்களின் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்க தமிழ்நாடு கிளை லோகோவை உருவாக்கம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

திண்டுக்கல் ஜி.டி.என்., செவிலியர் கல்லுாரி மைதானத்தில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை சார்பாக மாநில மாநாடு நடந்து வருகிறது. 2 ம் நாள் மாநாட்டில் ஆசியா, இந்திய புத்தக உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழகம் முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லுாரிகளில் இருந்து பங்கேற்ற 3256 மாணவர்கள் மனித வடிவில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை லோகோவை உருவாக்கம் செய்து சாதனை படைத்தனர்.

சங்க தலைவர் ஆனி கிரேஸ் கலைமதி தலைமையில் நடந்த இதில் கல்லூரி இயக்குனர் துரை முன்னிலை வகித்தார். ஆசிய , இந்திய சாதனை புத்தக பொறுப்பாளர் விவேக் சாதனை புத்தகத்தை கையெழுத்திட்டு வழங்கினார்.

மேலும் இதில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண கலரில் பலுான்கள் பறக்க விடப்பட்டன.ஜி .டி. என். நர்சிங் கல்லுாரி முதல்வர் வசந்தாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை சங்க ஆலோசகர் சுதா, துணைத் தலைவர் உதயகுமார், செயலாளர் விஜயலட்சுமி, சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us