ADDED : பிப் 12, 2026 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: -கோபால்பட்டியில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் ஏறியதால் விபத்தில் சிக்கியது. கேரளாவில் இருந்து சிவகங்கைக்கு ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரியை, காளையார்கோவிலை சேர்ந்த டிரைவர் முத்துச்சாமி 46, ஓட்டி வந்தார்.
கோபால்பட்டி பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் லாரியின் முன்பக்கம் சேதம் அடைந்து, டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

