ADDED : நவ 14, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்; கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில் 40. இவர் கிருஷ்ணகிரியில் இருந்து திண்டுக்கல் நோக்கி கல்துாண்களை ஏற்றி லாரியில் வேடசந்துார் வழியாக திண்டுக்கல் சென்றார்.
நேற்று காலை 6:00 மணிக்கு எவரடி நுாற்பாலை முன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் டிவைடரில் மோதி சிக்னல் கம்பத்தை உடைத்து ரோட்டில் கவிழ்ந்தது. டிரைவர், இரு லோடுமேன்கள் தப்பினர்.

