/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்மாய்களை மீன் வளர்ப்பிற்கு குத்தகை விடாததால் ரூ.3 கோடி இழப்பு
/
கண்மாய்களை மீன் வளர்ப்பிற்கு குத்தகை விடாததால் ரூ.3 கோடி இழப்பு
கண்மாய்களை மீன் வளர்ப்பிற்கு குத்தகை விடாததால் ரூ.3 கோடி இழப்பு
கண்மாய்களை மீன் வளர்ப்பிற்கு குத்தகை விடாததால் ரூ.3 கோடி இழப்பு
ADDED : டிச 09, 2024 05:59 AM

மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 194 ஊராட்சிகள், ஊரக வளர்ச்சித் துறையில் 170, மீன்வளத் துறையில் 61 ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் 8 என மொத்தம் 1333 கண்மாய்கள் உள்ளன. கண்மாய்களை ஆண்டுதோறும் மீன் வளர்ப்பிற்கு அரசுக்கு ரூ.5 கோடி இலக்காக நிர்ணயித்து குத்தகைக்கு விடப்படும்.
அப்பகுதியில் உள்ள ஊராட்சி, விவசாய சங்கத்தினருக்கு வழங்கியது போக அரசுக்கு குத்தகை மூலம் ரூ. 2 கோடி கிடைக்கும்.
பொதுப்பணித்துறை,மீன் வளர்ப்பு துறை சார்பில் நடக்கும் இந்த குத்தகை கடந்த 3ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
அரசு அதிகாரிகளின் சுயநலத்தாலும் தில்லுமுல்லுகளாலும் குத்தகை நடத்தப்படாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்களை மீறி இந்த முறையீடு 3 ஆண்டுகளாக நடக்கிறது.
மீன் உற்பத்தியை அதிகரித்திட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை மாவட்ட கலெக்டர் தலைமையில் டி.ஆர்.ஓ., திட்ட அலுவலர், மீன்வளத்துறை துணை இயக்குனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், வேளாண் துணை இயக்குனர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கும் தெரியாமலேயே பொதுப்பணித்துறையினர் சில விதிமுறைகளை கடைபிடிக்காமல் முறைகேடு செய்து உள்ளதாக விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். வத்தலக்குண்டு ஒன்றியம் குன்னுவாரன்கோட்டை கண்மாயில் முறைகேடாக மீன்பிடிப்பதற்கு அதிகாரிகள் கையூட்டு பெற்று கொண்டு மீன்பிடிக்க அனுமதித்துள்ளனர்.
அதிகாரிகளை வசப்படுத்திய வியாபாரி கண்மாய்க் கரையிலேயே கீற்றுக் கொட்டகை அமைத்து பரிசல் மூலம் மீன் பிடித்து விற்பனை செய்கிறார். இது சம்பந்தமாக பல புகார்கள் கலெக்டர் வரை அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.