ADDED : டிச 10, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., அருள்குமார் உள்ளிட்ட போலீசார் நத்தம் பகுதியில் சோதனை செய்தனர்.அப்போது காந்திநகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த கணேசனை 35, நத்தம் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள்,பணம், அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.