/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் குறைந்த முருங்கை விலை
/
ஒட்டன்சத்திரத்தில் குறைந்த முருங்கை விலை
ADDED : டிச 16, 2024 05:52 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால் நாசிக் முருங்கைக்காய் விலை குறைந்து கிலோ ரூ.210 க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்ற்கு அம்பிளிக்கை, கப்பலபட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி,திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், மூலனுார் பகுதிகளில் கரும்பு, செடி முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் உள்ளூர் முருங்கை வரத்து மிகவும் குறைந்ததால் நாசிக் பகுதியில் விளைந்த முருங்கைக்காய் இங்கு கொண்டுவரப்பட்டு கிலோ ரூ.340 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது இங்கு பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருப்பதால் மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் அதிகரித்தது.
இதனால் நாசிக் முருங்கை விலை குறைந்து கிலோ ரூ.210 க்கு விற்பனையானது. உள்ளூர் கரும்பு முருங்கை கிலோ ரூ.160,செடி முருங்கை ரூ.130 க்கு விற்பனையானது.