/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாழ்வான மின் பெட்டியால் விபத்து அபாயம்
/
தாழ்வான மின் பெட்டியால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 04, 2025 01:05 AM

பள்ளத்தால் விபத்து
பழநி புது தாராபுரம் ரோடு ரயில்வே கேட்டு அருகே கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் அப்படியே விடப்பட்டுள்ளதால் விபத்து நடக்கிறது .அதிக வாகனங்கள் சென்று வரும் பாதை என்பதால் பள்ளத்தை மூட வேண்டும். ராஜ்குமார்.
.........---------எரியாத மின் விளக்கு
திண்டுக்கல் நாகல்நகர் 36வது வார்டு கிசில்வா சந்தில் உள்ள தெருவிளக்கு 2 மாதங்களாக எரியவில்லை .இதனால் பொதுமக்கள் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ண மூர்த்தி, நாகல்நகர்.........---------சிதிலமடைந்த ரோடு
அம்பாத்துரை ஸ்டேட் பேங்க் அருகே முற்றிலுமாக ரோடு சிதிலமடைந்துள்ளது. தினமும் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர் .ரோடு சேதத்தால் விபத்தும் நடக்கிறது. புதிதாக ரோடு அமைக்க வேண்டும். சரவணக்குமார், திண்டுக்கல்.........----------ரோட்டில் ஓடும் குடிநீர்
செம்பட்டி- மதுரை ரோடு போலீஸ் ஸ்டேஷன் அருகே குடிநீர்குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது .அப்பதியில் பள்ளம் ஏற்பட்டு விபத்து அபாயமும் உள்ளது . இதை முழுமையாக சரி செய்ய வேண்டும். ராகவன், செம்பட்டி...........----------நோய் பரவும் அபாயம்
வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சி காந்திநகர் கிழக்குபகுதி செல்லும் ரோட்டில் குப்பை அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது . நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பையினை அகற்றவேண்டும். வி.சுருளியப்பன், காந்திநகர்.
.....-----------
தாழ்வான மீட்டர் பெட்டி
நல்லமனார்கோட்டை குதுப்பணம் பட்டியில் மின்சார மீட்டர் பெட்டி தாழ்வாக பாதுகாப்பற்ற நிலையில் விபத்து ஆபத்துடன் உள்ளது. சீரமைத்து பாதுகாப்பான உயரத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -- பாண்டியன், எரியோடு.
...............-----------கழிவுநீர் தேக்கம்
திண்டுக்கல் அறிவு திருக்கோயில் ரோட்டில் சாக்கடை இல்லாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .கழிவுநீர் செல்லும் பகுதியில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளதால் இதை சரி செய்து சாக்கடை அமைத்து தர வேண்டும்.அகிலா, திண்டுக்கல்.
.................-----------