/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளிகளில் மெட்ராஸ் ஐ விழிப்புணர்வு
/
பள்ளிகளில் மெட்ராஸ் ஐ விழிப்புணர்வு
ADDED : ஜூலை 16, 2025 01:26 AM

கோபால்பட்டி : -தினமலர் செய்தி எதிரொலியாக வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மெட்ராஸ் ஐ கண் நோய் குறித்து சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்டத்தில் வெயிலின் காரணமாக வெப்பம் அதிகரித்துள்ளது. கோபால்பட்டி சுற்று பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மெட்ராஸ் ஐ தாக்குதல் காரணமாக பள்ளிகளில் விடுப்பு எடுப்பது அதிகரித்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கோபால்பட்டி, வேம்பார்பட்டி, அய்யாபட்டி பள்ளிகளில் மாணவர்களுக்கு கண் வலி,டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் முறை, தடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவ அலுவலர் பிவின் ஆரோன் , வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி சாமி பங்கேற்றனர்.