ADDED : டிச 01, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:வேலை கிடைக்காத விரக்தியில் மதுரையை சேர்ந்த வாலிபர் கொடைக்கானலில் அரிவாளால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் அக் ஷய் குமார் 24. நேற்று மாலை டூவீலரில் கொடைக்கானல் வந்தவர் பெருமாள்மலை அருகே அரிவாளால் தனது கழுத்தை அறுத்து கொண்டார். ரத்த காயத்துடன் இருந்தவரை அவ்வழியே வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வந்த போது ஆம்புலன்சிலிருந்து குதித்து ஓடினார். அவரை கொடைக்கானல் போலீசார் பிடித்து விசாரித்தனர். வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.