ADDED : ஜூலை 14, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தையன்கோட்டை: சேடப்பட்டி ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மகிழ் முற்றம் அமைப்பு துவக்க விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் சிங்காரவேல், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சவுதாமணி முன்னிலை வகித்தனர். ஆசிரியை பரமேஸ்வரி வரவேற்றார். மாணவர்களுக்கு குழு கொடிகள் வழங்கப்பட்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். குழுக்களுக்கான மதிப்பெண் பலகை திறந்து வைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர் ராமு செய்திருந்தார். ஆசிரியர்கள் ரமாபிரபா, விமலா, ரோஸ்லின், கல்வியாளர்கள் அழகேஸ்வரி, அருணா, பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

