ADDED : ஜன 31, 2025 12:19 AM

அ நிறம் | அளவு
சாணார்பட்டி; -சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் தை அமாவாசையை யொட்டி நடந்த மகா பிரத்யங்கரா தேவி யாக பூஜையை சபை நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.
இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்க யாககுண்டத்தில் மிளகாய் வத்தல் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடந்தது. வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர்.கோயிலில் உள்ள கோசாலையில் 100க்கு மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்க அமாவாசை கோபூஜையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
