/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் மீது கார் ஏற்றி கொல்ல முயன்றவர் கைது
/
போலீஸ் மீது கார் ஏற்றி கொல்ல முயன்றவர் கைது
ADDED : அக் 28, 2025 04:11 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே போலீஸ் மீது கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் தாலுகா எஸ்.ஐ., அங்கமுத்து தலைமையிலான போலீசார் திண்டுக்கல், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செட்டியப்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்தபோது காரை நிறுத்தாமல் போலீஸ் மீது மோதுவதுபோல் ஓட்டி வந்தார்.
சுதாரித்த போலீசார் காரை மடக்கிப்பிடித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் ம.மூ.கோவிலுார் பிரிவு குழிப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பதும் கார் சீட் அடியில் பட்டாக்கத்தி, ரூ.ஒரு லட்சம் பணம் இருந்ததும் தெரிந்தது.
விசாரணையில் முன்விரோதத்தில் எதிரிகளை கொலை செய்வதற்காக காரில் ஆயுதம் பதுக்கி வைத்திருந்தாகவும், கூட்டாளிகளாக சேர்பவர்களுக்கு கொடுப்பவர்களுக்காக பணம் வைத்திருந்ததாகவும் கூறி உள்ளார்.
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

