/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி: ஒருவர் கைது
/
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி: ஒருவர் கைது
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி: ஒருவர் கைது
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி: ஒருவர் கைது
ADDED : ஆக 20, 2025 02:48 AM
திண்டுக்கல்,:பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி திண்டுக்கல்லில் 7 பேரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் வேடப்பட்டி அருகே அபிராமிநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 35. இவரிடம் மேட்டுப்பட்டி மொட்டனம்பட்டி ரோட்டைச் சேர்ந்த சரவணன் 42, நண்பராக அறிமுகமானார். வடமதுரை அருகே கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருவதாக கூறிய சரவணன், அரசு துறைகளில் முக்கிய நபர்கள், அரசியல் பிரபலங்களையும் தெரியும் எனவும். ரூ.8 லட்சம் கொடுத்தால் உங்கள் மனைவிக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித்தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதை நம்பி செந்தில்குமார் 2022 ஆக., 16ல் மனைவி அபிராமியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்தை சரவணன் வங்கிக்கணக்கிற்கு அனுப்பினார். சில நாட்களில் பொதுப்பணித்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு வந்து சேருமாறு தமிழக அரசு முத்திரையிட்ட பணி நியமன ஆணையை சரவணன் கொடுத்துள்ளார். ஆனால் அது போலி ஆணை என தெரிய மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த குமரேசன், அசோக், செல்வராஜ், மூர்த்தி, முத்துப்பாண்டி, சுதாகர் உள்ளிட்ட 7 பேரிடம் ரூ.80 லட்சத்து 5 ஆயிரம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
ஏற்கனவே வடமதுரையைச் சேர்ந்த வீரப்பனிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் சரவணன் திண்டுக்கல் சிறையில் உள்ள நிலையில் அவரை குற்றப்பிரிவு போலீசார் வேலைவாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த புகார் தொடர்பாக காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.