/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
/
ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
ADDED : டிச 03, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழநியில் தள்ளுவண்டி கடையில் இட்லி,தோசை செய்வதற்காக ஒரு டன் ரேஷன் அரிசியை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பழநி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் 60. அப்பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்துகிறார். தள்ளுவண்டி கடையில் இட்லி,தோசை உள்ளிட்ட டிபன் செய்வதற்காக பழநி அடிவாரம் சுற்று பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி உள்ளார். குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்.ஐ.ராதா, எஸ்.எஸ். ஐ., கணேசன், போலீசார் விஜய், காளிமுத்து உள்ளிட்டோர் மனோகர் வீட்டில் பதுக்கிய ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மனோகரனை கைது செய்தனர்.