/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
/
மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
ADDED : ஏப் 18, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகையை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி எதிரே மாடியில் குடியிருந்து வருபவர் நுார்ஜஹான் 80. மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த நுார்ஜகானை தாக்கிய நபர் 4 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார். ஒட்டன்சத்திரம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மதுரையை சேர்ந்த யாசிக் முகமது அலியை 27, கைது செய்து நகையை மீட்டனர்.