/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயிலில் தேனி விவசாயியிடம் நகை திருடியவர் கைது
/
ரயிலில் தேனி விவசாயியிடம் நகை திருடியவர் கைது
ADDED : ஜன 31, 2025 02:05 AM
திண்டுக்கல்:பூவனுாரிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரயிலில் பயணித்த தேனி விவசாயியிடம் 17 பவுன் நகையை திருடிய திண்டுக்கல் நபரை ரயில்வே போலீசார் அரை மணி நேரத்தில் கைது செய்து நகையை மீட்டனர்.
தேனி மாவட்டம் வெங்கடசலபுரம் மேற்கு தெருவை சேர்ந்த விவசாயி பாலாஜி 26. வீடு கட்டி வருகிறார். இதற்கான பணத்துக்காக உளுந்துார்பேட்டை பூவனுார் அருகே உள்ள உறவினர்களின் நகையை பெற்று அடகு வைக்க 17 பவுன் நகையுடன் விழுப்புரம் திண்டுக்கல் ரயிலில் வந்தார்.
நேற்று முன் தினம் இரவு 10:15 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்த போது பாலாஜி அயர்ந்து துாங்கினார். நகையுடன் கூடிய அவரது பேக் திருடுபோனது. திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையிலான போலீசார் பேக்கிலிருந்த பாலாஜி அலைபேசி எண்ணை வைத்து அரை மணி நேரத்தில் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஜான்கென்னடி 37,யை கைது செய்து நகையை மீட்டனர். ஜான் கென்னடி மீது கஞ்சா வழக்குகளும் நிலுவையில் உள்ளன.