/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அவதுாறு பரப்புவதாக கூறி மிரட்டியவர் கைது
/
அவதுாறு பரப்புவதாக கூறி மிரட்டியவர் கைது
ADDED : டிச 21, 2024 05:48 AM
பழநி: பழநி , அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் அவதூறு பரப்புவதாக கூறி மிரட்டி பணம் பறித்த நபரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.
பழநி அடிவாரம் பகுதியில் பக்தர்களின் வருகை அதிகரித்ததை முன்னிட்டு ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது. அய்யம்புள்ளி சாலையில் பல்வேறு வகையான சாலையோர கடைகள் முளைத்துள்ளன. இக்கடைகளில் ஸ்வெட்டர் கடை வைத்துள்ள பழநியை சேர்ந்த கந்தசாமி 54 ,என்பவரிடம் அடிவாரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் 40, செய்தியாளர்களிடம் தெரிவித்து ஊடகங்கள், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி விடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இவர் சிலரிடம் பத்திரிகையாளர் என கூறி உள்ளார். பழநி அடிவாரம் போலீசார் நாகேந்திரனை கைது செய்தனர்.

