/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர்த்தேக்க மறுகாலில் மூழ்கியவர் பலி
/
நீர்த்தேக்க மறுகாலில் மூழ்கியவர் பலி
ADDED : டிச 14, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் : ஆத்துாரை சேர்ந்த கூலித்தொழிலாளி மதுரை வீரன் மகன் பெரிய மருது 18. ஆத்துார் நீர் தேக்கம் அருகே உள்ள சடையாண்டி கோயிலில் திருக்கார்த்திகை விழா காண நண்பர்கள் சிலருடன் சென்றார்.
அப்போது ஆத்துார் நீர்த்தேக்க மறுகால் செல்வதை காண்பதற்காக அப்பகுதிக்கு சென்றார். எதிர்பாராமல் கால் தவறி விழுந்த பெரிய மருது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மராஜ் தலைமையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு பின் முள் புதரில் சிக்கி இறந்து கிடந்த உடலை மீட்டனர். செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரிக்கிறார்.-

