/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்ணை கேலி செய்ததை தட்டிக்கேட்டவர் படுகொலை
/
பெண்ணை கேலி செய்ததை தட்டிக்கேட்டவர் படுகொலை
ADDED : ஜூலை 14, 2025 06:25 AM

பட்டிவீரன்பட்டி,: திண்டுக்கல் அருகே பெண்ணை கேலி செய்த விவகாரத்தில், தட்டிக்கேட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் கொடி கிருஷ்ணன், 25. இவருக்கும், அய்யங்கோட்டை, புதுாரை சேர்ந்த தனபாண்டி, 25, என்பவருக்கும் பெண்களை கேலி செய்த விவகாரத்தில் தகராறு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தனப்பாண்டி வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்ற கிருஷ்ணன், அவரை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த தனபாண்டி, கிருஷ்ணனை காளியம்மன் கோவிலுக்கு வரவழைத்து, சகோதரர் நாகபாண்டி, 23, நண்பர் சஞ்சய், 25, ஆகியோருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமார் விசாரித்தார். தனபாண்டி, நாகபாண்டி, சஞ்சய் ஆகியோரை, பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.