/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.13.76 லட்சத்துடன் ரயிலில் வந்தவர் ஒப்படைப்பு
/
ரூ.13.76 லட்சத்துடன் ரயிலில் வந்தவர் ஒப்படைப்பு
ADDED : மார் 18, 2025 01:22 AM

திண்டுக்கல்; ரூ.13.76 லட்சம் ரொக்கத்துடன் வந்தவரை திண்டுக்கல் ரயில்வே போலீசார் பிடித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈச்சான்விளையை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்44. இவர் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றித்தரும் தொழிலையும் செய்துள்ளார்.
இவர் ரூ.13.76 லட்சத்துடன் சென்னையில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவில்லா பெட்டியில் வந்தார். திண்டுக்கலில் ரயில்வே போலீசார் கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நவநீத கிருஷ்ணனின் உடைமைகளை சோதனை செய்த போது ரூ.13.76 லட்சம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் துாயமணிவெள்ளைசாமி, எஸ்.ஐ.,ஆறுமுகம், தனிப்பிரிவு போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நவநீதகிருஷ்ணனை ஒப்படைத்தனர்.