ADDED : டிச 27, 2024 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் சமுத்திராபட்டி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்தது. ஐயப்ப சுவாமிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நடந்தது.
தொடர்ந்து கணபதி ஹோமமும், கும்பங்களுக்கு பூஜையும் நடந்தது. பக்தர்கள் பஜனை நடத்தினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.
108 சங்காபிஷேகமும், கலச அபிஷேகமும் நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணன் குருசாமி செய்தனர். தாண்டிக்குடி பஞ்சகிரீஸ்வரர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் விளக்கு பூஜையுடன் பஜன் நடந்தன.
சுவாமிக்கு ஐம்பொன்னால் ஆன கவசம் அணிவிக்கப்பட்டது. மாலை புலி வாகனத்தில் ஐயப்பன் மின்னொளியில் நகர் ஊர்வலம் நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்தனர்.