நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சித்தி விநாயகர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது.
கணபதி, காயத்ரி ஹோமங்கள் , சிறப்பு பூஜை, கலச வேள்வி நடந்தது. திருவிளக்கு பூஜை 18 படிகளுக்கு பூஜை நடத்தப்பட்டு, சரண கோஷத்துடன் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை குருசாமிகள் மோகன், மாரியப்பன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
நத்தம்-வேலம்பட்டி ஐய்யப்பன் கோயிலில் சுவாமி படத்திற்கு மாலைகள் அணிவித்து புஷ்பாஞ்சலி நடந்தது. பக்தர்கள் பஜனை நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. நீதிமன்றம் அருகில் உள்ள அய்யப்பன் கோயில், காந்திநகர் அய்யப்பன் கோயில்களிலும் மண்டல பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேகம் அன்னதானம் நடந்தது.