ADDED : ஜூன் 10, 2025 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர், மா விவசாயிகள், குத்தகைதாரர்கள் சங்கம் சார்பில்மாம்பழங்களை தரையில் கொட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகள் சங்க ஆத்துார் செயலாளர் பிச்சமணி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் பெருமாள்,செயலாளர் ராமசாமி பங்கேற்றனர். இதை தொடர்ந்து கலெக்டரை சந்திக்க சென்ற விவசாய சங்கத்தினருக்கும், போலீசார் இடையே வாக்குவாதம் உருவானது. உயரதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்தனர்.