/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மஞ்சளாறு அணை நிரம்பி, வரத்து அதிகரிப்பு தேனி, திண்டுக்கல் மக்களுக்கு எச்சரிக்கை

ADDED : டிச 16, 2024 06:29 AM

தேவதானப்பட்டி: மஞ்சளாறு அணை நிரம்பிய நிலையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தேனி, திண்டுக்கல் மாவட்ட கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்புக் கருதி 55 அடி நீர் தேக்கப்படும். அக்.17ல் பாசனத்திற்கு திறக்கப்பட்டது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் டிச.13 இரவில் அணை நிரம்பியது.
அணைக்கு வினாடிக்கு 665 கன அடி வரத்தும், அப்படியே மூன்று கண் மதகு வழியாக வெளியேறுகிறது. நேற்று அணையில் சாரல் மழையால் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று 18 மி.மீ., மழை பெய்தது பதிவாகியுள்ளது. இதனால் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, உச்சம்பட்டி, சிவஞானபுரம் மஞ்சளாற்று கரையோர மக்களுக்கு நீர் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.-