/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து ராஜ்ஜியம் அமைய அயோத்திக்கு நடைபயணம்
/
ஹிந்து ராஜ்ஜியம் அமைய அயோத்திக்கு நடைபயணம்
ADDED : ஏப் 20, 2025 04:23 AM

வேடசந்துார் : இந்தியாவில் ஒருமித்த ஹிந்து ராஜ்ஜியம் அமைய வேண்டி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராம பக்தர் ஒருவர் கன்னியாகுமரி முதல் அயோத்தி ராமஜென்ம பூமிக்கு சிறு வண்டியை தள்ளியபடி நடை பயணத்தை தொடர்கிறார்.
அரியானா மாநிலம் மகேந்திராகட் தன்வாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி லேக் ராம் சுவாமி 50. ராமபிரான் , அனுமன் பக்தரான இவர் இந்தியாவில் முழுமையான ஹிந்து ராஜ்ஜியம் அமைய கன்னியாகுமரியிலிருந்து அயோத்தி ராமஜென்ம பூமிக்கு 2800 கி.மீ., நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்கான தனி வண்டியில் பாரத மாதா, ராமபிரான், அனுமன் படங்களுடன் 24 மணி நேரமும் எரியும் வகையில் தீபமும் ஏற்றி உள்ளார்
லேக்ராம் சுவாமி கூறகையில்,'' கன்னியாகுமரியில் நடை பயணத்தை துவக்கி ராமஜென்ம பூமியை அடைய உள்ளேன். அங்கு செல்ல 6 மாதங்கள் ஆகும். இந்தியாவில் ஹிந்து ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்பதே எனது நோக்கம் ''என்றார்.

