/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் மாநாடு
/
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் மாநாடு
ADDED : நவ 23, 2024 05:50 AM

திண்டுக்கல்; மார்க்சிஸ்ட் திண்டுக்கல் மாவட்ட 2 நாள் மாநாடு நத்தம் ரோடு தனியார் மஹாலில் நேற்று தொடங்கியது. கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதுமிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகள் ஜோதி ,கொடிமரம் கொடி, கொடி கயிறு , ஆகியவற்றை தலைவர்கள் பெற்று கொண்டனர்.
கருப்பணன் நினைவு கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி எடுத்துக் கொடுக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பெற்று கொண்டார். கருணாகரன் மாநாட்டு கொடியை ஏற்றினார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ராஜமாணிக்கம், பாலாஜி ,ஜெயந்தி ஆகியோர் தலைமைக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். திண்டுக்கல் எம்,பி.,சச்சிதானந்தம் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் பேசினார்.

