/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊதியத்தை பிடித்தால் போராட்டம் மார்க்சிஸ்ட் எம்.பி., எச்சரிக்கை
/
ஊதியத்தை பிடித்தால் போராட்டம் மார்க்சிஸ்ட் எம்.பி., எச்சரிக்கை
ஊதியத்தை பிடித்தால் போராட்டம் மார்க்சிஸ்ட் எம்.பி., எச்சரிக்கை
ஊதியத்தை பிடித்தால் போராட்டம் மார்க்சிஸ்ட் எம்.பி., எச்சரிக்கை
ADDED : ஜூலை 10, 2025 03:11 AM
திண்டுக்கல்: ''போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள்  ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டால் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்'' என திண்டுக்கல் மார்க்சிஸ்ட்  எம்.பி., சச்சிதானந்தம் எச்சரித்துள்ளார்
திண்டுக்கல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர்  கூறியதாவது: பா.ஜ.,  அரசின்  தவறான கொள்கையின் காரணமாக மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் போராட்டம் நடத்துகின்றன.  வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம் ஏற்பட்டதற்கும், கடலுாரில் ரயில்வே தண்டவாள விபத்து ஏற்பட்டதற்கும் ரயில்வே துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளது தான் காரணம். தொழிற்சங்க   போராட்டத்திற்கு  தமிழக அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். ஆனால்  பணிக்கு வராதோரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்தால் மாநில அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும்  என்றார்.