UPDATED : நவ 17, 2026 09:38 PM
ADDED : நவ 17, 2026 09:38 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கிய நிதியை மத்திய, மாநில அரசுகள் வழங்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேடசந்துார் பேரூராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை வகித்தார். நிதி இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளை முடக்காதே என கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, பொன்மதி பங்கேற்றனர்.
நத்தம் பஸ் ஸ்டாண்ட் முன் ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமையிலும், பழநி நகராட்சி அலுவலகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
