/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீடு புகுந்து பெண்ணிடம் முகமூடி கொள்ளையர்கள் நகை பறிப்பு
/
வீடு புகுந்து பெண்ணிடம் முகமூடி கொள்ளையர்கள் நகை பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் முகமூடி கொள்ளையர்கள் நகை பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் முகமூடி கொள்ளையர்கள் நகை பறிப்பு
ADDED : ஆக 12, 2025 03:40 AM
வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் கார் டிரைவர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து சென்றனர்.
வேடசந்துார் அருகே நாகம்பட்டியில் ரோட்டோர தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருபவர் கார் டிரைவர் அய்யனார் 45. இவரது மனைவி பாண்டியம்மாள் 42. இவர் முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர்.
நேற்று முன் தினம் இரவு 9 :00 மணிக்கு பாண்டியம்மாள் சமையல் செய்து கொண்டிருந்த போது முகமூடி அணிந்தபடி வந்த மூன்று கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். அரிவாள், கத்தியை பாண்டியம்மாள் கழுத்தில் வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயின், அரை பவுன் தோடு ஆகியவற்றை பறித்தனர். பின் பீரோவை திறந்து தேடிய போது எந்த பொருட்களும் சிக்காததால் அவர்கள் தப்பி சென்றனர். வேடசந்துார் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.