/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாஸ் அரிமா சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
/
மாஸ் அரிமா சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
ADDED : ஜூலை 22, 2025 04:12 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாஸ் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல்லை அடுத்த பாடியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் தலைவர் மணிகண்டன் பிரபு தலைமை வகித்தார்.
செயலாளர் மகாராஜன், பொருளாளர் விக்னேஷ் குமார் முன்னிலை வகித்தனர். சங்க புதிய தலைவராக வெற்றிச்செல்வன், செயலாளராக ஜான்பால் அந்தோணிசாமி,பொருளாளராக கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட முன்னாள் ஆளுநர் தங்கராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்ற சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களை மாவட்ட முன்னாள் ஆளுநர் மோகன் சிங் சங்கத்துடன் இணைத்து வைத்தார்.தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செம்பட்டி அருகே உள்ள ஒர்ஷினி மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மருத்துவ உபகரணங்கள், 15 மாணவர்களுக்கு உதவித்தொகை,ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் என ரூ.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்மண்டல தலைவர் ஹரிஷ் வர்தன விக்னேஷ், வட்டார தலைவர் சிவசண்முகம் வழங்கினர்.
இதையொட்டி மருத்துவ முகாமும் நடந்தது. சிவசங்கர் ஸ்டீல்ஸ் சண்முகராஜன், தளபதி வாட்டர் சப்ளை முகமதுசுல்தான், சித்தாரா மகால் அமானி அபு அயூப் அன்சாரி, டாக்டர்கள் விமல்குமார், அமிர்தகடேஷ்வர், ஓட்டல் ஸ்வாகத் கிராண்ட் அரசன் சண்முகம், முகமது காசிம் அர்ஷத், எஸ்.கே.இன்ஜினியரிங் டைரக்டர் செந்தில்குமார், இன்ஜினியர் மீனாட்சி சுந்தரம், ஜெகநாத் ஹாஸ்பிடல் அமிர்தகாடேஸ்வரா, ஏ.எம்.பில்டர்ஸ் சித்தாண்டி, ஆரியன்ஸ் ஜூவல்லர்ஸ் பிரதாப் நிதின் கட்கர், ஜி.கே.எல்., ஜூவல்லரி லோகநாதன், திண்டுக்கல் ராக்போர்ட் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் ரவீந்திரன் மண்டல தலைவர் ஹரிஷ்வரன் விக்னேஷ், செந்தில் ராஜன், ரமேஷ், சந்தோஷ், கண்ணன், யமஹா ஷோரூம் நந்தகோபால், சுபாஷ் டெக்ஸ்டைல் உரிமையாளர் மகேஷ் குமார், பாலாஜி டிரைவிங் ஸ்கூல் இயக்குனர் ராம்குமார், சிவமுருகன் டிரேடர்ஸ் சிவக்குமார், அம்மன் முழு மெட்டல்ஸ் நிர்வாக இயக்குனர் மயில்வாகனன், எஸ்.எம்.கே.எம்.மில்., இயக்குனர் ரமேஷ் பாபு, ஏ.எம்.பி. பார்ம்ஸ் இயக்குனர் முகமது யூசுப் அன்சாரி பங்கேற்றனர்.
புதிய தலைவர் வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்