ADDED : நவ 01, 2025 03:06 AM

திண்டுக்கல்: மதுரை மறை மாநில இயேசு சபை பள்ளிகளுக்கு இடையேயான கணித வினாடி வினா போட்டி, கணித ரங்கோலி போட்டி,கணித சிந்தனை விளக்க கட்டுரை நிகழ்ச்சி, கணித மாதிரிகள் தயாரிக்கும் போட்டி திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
60 பள்ளிகளில் இருந்து 102 அணிகள் கலந்து கொண்டன
இதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் மரியன் கணித மன்ற தலைவர் மரிய ராஜேந்திரன் வரவேற்றார். மரியன்னை கலைமனைகளின் அதிபர் மரிவளன், தாளாளர் மரியநாதன் பேசினர்.
முன்னாள் மாணவர் டாக்டர் ம. சேவியர் ஜெரால்ட் புனிதன் காணொளி வாயிலாக கலந்துகொண்டார்.
சென்னை அண்ணா பொறியியல் பல்கலை ஓய்வு பேராசிரியர் அருள் சிரோமணி ,ஆங்கில வழி கல்வி இயக்குனர் தெரஸ் நாதன், புனித மரியன்னை மாணவர் இல்ல இயக்குனர் மரிய தேன் அமிர்தராஜ் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மரியன் கணித மன்ற தலைவர் மரிய ராஜேந்திரன், செயலாளர் கிறிஸ்டோபர். பொறுப்புச் செயலாளர் ஹென்றி பிரதீப் குமார், பொருளாளர் செலாஸ்டின், ஆசிரியர் ஜஸ்டின் செய்திருந்தனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் லுார்து பிரகாசம் நன்றி கூறினார்.

