
இளைஞர் பலி
நத்தம் :முஸ்லிம் மேலத்தெருவை சேர்ந்தவர் அன்சாரி 21. அக்.28 இரவு டூவீலரில் கோவில்பட்டி பஸ் ஸ்டாப் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த அவர் இறந்தார். நத்தம் போலீசார் விசாரக்கின்றனர்.
ஓய்வு தாசில்தார் பலி
வேடசந்துார்:அய்யனார் நரை சேர்ந்தவர் ஓய்வு துணை தாசில்தார் செல்லம்மாள் 70.
ஆத்து மேடு அருகே நடந்து வந்த போது பின்னால் ரேஷன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி மோதி இறந்தார் . லாரி டிரைவரான அப்பணம்பட்டி சக்திவேல் 25, வேடசந்துார் போலீசில் சரண் அடைந்தார்.
ரோட்டில் கவிழ்ந்த கார்
நத்தம் :-திருச்சியில் இருந்து மதுரை நோக்கி கார் ஒன்று சென்றது. காரை மதுரை-செல்லுாரை சேர்ந்த அசாருதீன் 30.ஓட்டினார்.மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் உள்ள லிங்கவாடி பிரிவு பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி சேதமடைந்தது. காரில் வந்த அப்துல்கான் 54, பானு 52, டிரைவர் அசாருதீன் காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரக்கின்றனர்.
கருவூல அதிகாரி பலி
கீரனுார் :பழநி எம்.ஆர்.டி நகரை சேர்ந்தவர் மகேந்திரன் 46. தாராபுரத்தில் உதவி கருவூல அதிகாரியாக பணிபுரிகிறார். டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) வேலம்பட்டி அருகே சென்ற போது கார் மோதியதில் மகேந்திரன் இறந்தார். கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் : வக்கம்பட்டியில் மதுபானம் விற்ற பழைய வக்கம்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜை 41 , திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர். 29 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்கொலை
திண்டுக்கல் : செல்லமந்தாடி ஜி.எஸ். நகரை சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி மோகனப்பிரியா 30 . இருவர் இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மன உளைச்சலில் இருந்த மோகனப்பிரியா நேற்று முன்தினம் அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

