sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இனி எல்லாம் சுகமாகட்டும்...2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்..

/

இனி எல்லாம் சுகமாகட்டும்...2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்..

இனி எல்லாம் சுகமாகட்டும்...2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்..

இனி எல்லாம் சுகமாகட்டும்...2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்..


ADDED : டிச 31, 2024 05:12 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

எஸ்.சுஜாதா,குடும்பத்தலைவி, திண்டுக்கல் : 2024ல் பல்வேறு நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளது. குறிப்பாக நம் இந்தியா பல்வேறு நாடுகளுடன் நட்புறவு வளர்ந்துள்ளது வரவேற்க தக்க செயல். கேரளாவில் நடந்த நிலச்சரிவு, தமிழகத்தில் நிகழ்ந்த பெஞ்சல் புயல்கள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் வருத்தமளிக்கும் நிகழ்வுகளாக இருந்தது. 2025ல் இதுபோன்ற எந்த நிகழ்வுகளும் நடக்காமல் இருக்க வேண்டும். அதற்கு அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதிய ஆண்டில் தற்போது பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்புகளை விட கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை கட்டுப்படுத்த வேண்டும். தொழில் முனையும் பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை மத்திய,மாநில அரசுகள் செயல்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

மழை வேண்டும்

ஆர்.ரோகித், கல்லுாரி மாணவர், வடமதுரை : 2024ல் தமிழக அளவில் இயல்பு நிலைக்கு மேல் மழை பெய்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் வடமதுரை பகுதியில் இயல்பு நிலைக்கு ரொம்பவும் குறைவாகவே மழை பெய்தது. 2008க்கு பின்னர் கனமழை இப்பகுதிக்கு கிடைக்காததால் குளங்கள் நிரம்பவில்லை. இதனால் வட்டார மக்கள், விவசாயிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனர். பிறக்கும் 2025ம் புதிய ஆண்டிலாவது வடமதுரை பகுதியில் போதுமான மழை கிடைக்க வேண்டும். தற்போது தொழில் வாய்ப்புகள் என்பது மாநில அளவில் ஒரிரு நகரங்களை மட்டுமே சார்ந்து குவிகிறது. இவை பல நகரங்களுக்கும் பரவலாக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் நெரிசல் ஒரு குறிப்பிட்ட நகரங்களிலே அதிகரிப்பதை தவிர்க்க முடியும். வேலைவாய்ப்புகள் பெருக தொலைநோக்கு பார்வையான திட்டங்கள் வேண்டும்.

வேலை வாய்ப்புகள்

உருவாக வேண்டும்

-ஆர்.தேன்மொழி,கல்லுாரி முதல்வர்,சக்தி மகளிர் கலை,அறிவியல் கல்லுாரி,ஒட்டன்சத்திரம் : 2024 சவால்களையும்,வாய்ப்புகளையும் கொண்டு வந்தது. மாணவர்களுக்கு புதிய கற்றல் அனுபவங்கள் நண்பர்கள்,நினைவுகளை கொடுத்தது. அறிவியல்,தொழில்நுட்பத் துறைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள்,கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னேற்றம் கண்டது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்,மெசின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் கல்வியில் பிரபலமானது. 2025 ல் நவீன கற்றல் முறைகள்,தொழில்நுட்பங்கள் கல்வியில் மேம்பாடுகளை கொண்டு வரவேண்டும். பல்துறை கல்வி,திறன் மேம்பாட்டு முக்கியத்துவம் பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சி,வேலை வாய்ப்புகள் அதிகமாக வேண்டும். புதிய வாய்ப்புகள் புதிய சாதனைகள்,புதிய அனுபவங்களை அளிக்கும் என எதிர்பார்ப்புகள் உள்ளது. வெறும் பாடப் புத்தகங்களை மட்டுமே நம்பாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு புதிய அறிவைப் பெற வேண்டும். சமூக பொறுப்பு,உலகளாவிய ஒத்துழைப்பை முன்னேற்றும் வகையில் மாணவர்கள் செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

தொழில் மையங்களை அமைக்கலாம்

ஜே.பி.சரவணன்,மாவட்ட தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு,பழநி : 2024ல் வியாபாரிகள் பல்வேறு கடுமையான சூழல்களை தாண்டி வெற்றி அடைந்தனர். நகராட்சி கடை வியாபாரிகள் குத்தகை காலத்தை 9 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக உயர்த்தியதை வரவேற்கிறோம். 2025ல் பல்வேறு சாதனைகளை வியாபாரிகள் தொடர உள்ளனர். பழநி -கொடைக்கானல் ரோப் கார் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். பழநி வையாபுரி குளத்தை துார்வாரி மேம்படுத்த வேண்டும். பழநி புது தாராபுரம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மேம்பாலத்தை விரைவாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தொழில் மையங்களை அமைக்க வேண்டும்.

பொருளாதாரத்தைமீட்கும் ஆண்டு

பார்த்தசாரதி, மாவட்டத் தலைவர், அரசு அலுவலர் ஒன்றியம், திண்டுக்கல் : 2024ல் பலருக்கும் எதிர்பாராத வண்ணம் இல்லை. பல்வேறு சிரமங்களும், இடர்பாடுகளும் நிறைந்ததாகவே இருந்தது. ஏதோ ஒரு வித மன அழுத்தம் இருந்துகொண்டே இருந்ததை பலரும் கூறினர். 2025ல் மிகவும் ஆவலோடு எதிர்பாக்கிறோம். கடந்த கால இன்னல்கள் நீங்கி, மக்கள் வாழ்வில் ஏற்றமும், அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ்ந்திடும் வகையில் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு உள்ளது. மழை, வெள்ளம், புயல் என பேரிடர்களால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் தமிழக மக்கள் அனைவரின் பொருளாதாரத்தை மீட்கும் ஆண்டாகவும் இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்குமகிழ்ச்சியான ஆண்டு

அ.ரமேஷ், விவசாயி,கே.அய்யாபட்டி, நத்தம் : 2024ல் மா விளைச்சலில் கடுமையான பாதிப்பை சந்தித்தோம். இதனால் மாமரங்களுக்கு மருந்து தெளித்த செலவு கூட வரவு இல்லாமல் கடனில் சிக்கித் தவிக்கிறோம். ஆனால் தேங்காய் விலை வரலாறு காணாத அளவு விலை உயர்ந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தேங்காய் விலை 3 மாதங்களுக்கு மேலாக உயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் 2025ல் புத்தாண்டும் விலை இதே நிலையில் நீடிக்கும் என நம்புகிறோம். அதேபோல் நல்ல மழை பெய்துள்ளதால் ஆறு குளங்கள், நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன்.

கோரிக்கைகளை எதிர்பார்க்கிறோம்

டே.குன்வர்ஜோஸ்வாவளவன், பொதுச்செயலாளர், ஜே.எஸ்.ஆர். தொடக்கப்பள்ளி ஆசிரியர், கூட்டணி : மாநில முன்னுரிமை அளிக்கும் அரசாணை 243 அமல்படுத்தப்பட்டது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 2024ல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு கலைதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகள் தமிழக அரசு நிறைவேற்றும் என ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆண்டு இறுதியில் கூட அது நிறைவேறாமல் போனது ஏமாற்றமாக உள்ளது.

2025ல் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும்,நிர்வாக ரீதியான கற்பித்தல் சுதந்திரம், பனிச்சுமையை குறைத்தல், பதவி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஆகியவற்றையும் எதிர்பார்த்து புத்தாண்டை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கிறோம்.

புதிய நடைமுறைகள் தேவை

ஜெ.சரவணன், சிறுதொழில் முனைவோர்,கோட்டைப்பட்டி, சின்னாளபட்டி : 8ம் வகுப்பு வரை படித்து,விவசாயத்தை முக்கிய தொழிலாக மேற்கொண்டேன். விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதலின் முக்கியத்துவம் குறித்து அறிந்தேன்.

மத்திய, மாநில அரசுகளின் பயிற்சிகளால், இதற்கான நடவடிக்கைகளை கடந்த பிப்ரவரியில் துவக்க முடிந்தது.

தேங்காய் எண்ணெயிலிருந்து 13 வகை சோப்பு, சோப்புத்துாள், முருங்கை இலை சூப் பவுடர், ஆவாரம்பூ, ரோஜா இதழ், கொள்ளு, கருவேப்பிலை பவுடர் உள்பட 7 விதமான இயற்கை உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுகிறோம். முற்றிலும் குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கொண்டு, குடிசை தொழிலாக நடத்துகிறேன். எதிர்பார்த்ததைவிட, இந்தாண்டு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்தாண்டில், தொழிலை விரிவுபடுத்தி ஆன்லைன் விற்பனையை துவக்க திட்டமிட்டுள்ளேன். காஸ்மெட்டிக் உற்பத்தி அனுமதியை, சிறு தொழில்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்.

இது தவிர, ஜி.எஸ்.டி., வரம்பில் உள்ள நடைமுறை பிரச்னைகள், மட்டுமே சவால்களாக உள்ளன. குடிசை, கைத்தொழில் உற்பத்தியை ஊக்குவிக்கும் அம்சங்களுடன், அங்கீகாரம், மார்க்கெட்டிங், வரி நிர்ணய முறைகளில், மத்திய, மாநில அரசுகள் புதிய நடைமுறைகள் அமல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

புத்துணர்ச்சி பெறுவோம்

டாக்டர் கே.வெங்கடாசலம்,முதன்மை ஆலோசகர்,தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம், திண்டுக்கல் : நுாற்பாலை வர்த்தகம் சிறப்படைய டிரம்ப் வருகையை எதிர்பார்க்கிறோம். பிப். 2022 ல் துவங்கிய ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, உலக பொருளாதார வர்த்தகத்தில் சறுக்கல் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் சரிந்ததாலும், போர் தொடர்ந்து நீடிப்பதாலும் வீழ்ச்சி காணப்படுகிறது. இந்திய ஜவுளி விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சூழல், இஸ்ரேல் பாலஸ்தீனப் போராலும் தொடர்கிறது.

2025ல் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் சூழ்நிலையில் ரஷ்யா உக்ரைன் போரும், இஸ்ரேல் பாலஸ்தீன போரும் நிற்கும் என எதிர்பார்க்கிறோம். 2025 ஏப்ரல் துவங்கி ஜவுளி சந்தையில் மீண்டும் புத்துணவு ஏற்படும்.

புதிய திட்டம் வேண்டும்

அப்துல் கனி ராஜா,அனைத்து விடுதிகள் உரிமையாளர் சங்கத்தலைவர், கொடைக்கானல்: 2024ல் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா,அதை சார்ந்த தொழில்கள் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. குறிப்பாக மேல்மலை, கீழ் மலைப் பகுதிகளில் சாகச சுற்றுலா, அனுமதி பெறாத விடுதிகளால் தங்களது தொழில் நலிவடைந்து ஏற்ற இறக்கமாகவே அமைந்தது. வரும் 2025ல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் புதிய திட்டங்களை அரசு அறிவித்து சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரிக்க வேண்டும்.

அது போன்று அனுமதி பெறாத காட்டேஜ்கள்,பாதுகாப்பற்ற சுற்றுலா சார்ந்த தொழில்களை ஆய்வுக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அரசுக்கு முறையாக வரி செலுத்தும் தங்களை போன்ற சங்கங்கள் முன்னேற்றத்தை அடையும். வரும் ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய அரசு உதவி புரிய வேண்டும்.






      Dinamalar
      Follow us