/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மயிலாடுதுறை - பாலக்காடு ரயில் இயக்கப்படுமா பயணிகள் எதிர்பார்ப்பு
/
மயிலாடுதுறை - பாலக்காடு ரயில் இயக்கப்படுமா பயணிகள் எதிர்பார்ப்பு
மயிலாடுதுறை - பாலக்காடு ரயில் இயக்கப்படுமா பயணிகள் எதிர்பார்ப்பு
மயிலாடுதுறை - பாலக்காடு ரயில் இயக்கப்படுமா பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 17, 2025 01:10 AM
வடமதுரை: மயிலாடுதுறையிலிருந்து திண்டுக்கல், பழநி வழியாக பாலக்காடு டவுனுக்கு புதிய ரயில், புனலுார் - மதுரை ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் தந்துள்ள நிலையில் விரைந்து இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மயிலாடுதுறையிலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் காலை 8:50 மணிக்கு தஞ்சாவூருடன் நிற்கிறது.
இதே போல் பாலக்காடு டவுனில் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் இரவு 7:10 மணிக்கு ஈரோடு வருகிறது. இந்த ரயில்களை ஒருங்கிணைத்து தஞ்சாவூரில் காலை 8:55 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு டவுனிற்கு மதியம் 2:40 மணிக்கு செல்லும் வகையிலும், அங்கிருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டிற்கு இரவு 7:10 மணிக்கு செல்லும் வகையிலும் ரயில்வே வாரியம் கடந்த செப்டம்பரில் ஒப்புதல் தந்தது.
இதே போல கேரள மாநிலம் புனலுாரில் மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர் வழியாக மதுரைக்கு அதிகாலை 3:00 மணிக்கு வரும் ரயிலை திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம் வழியாக விழுப்புரத்திற்கு காலை 8:00 மணிக்கு செல்லும் வகையில் நீட்டிக்கவும் ரயில்வே வாரியம் அனுமதி தந்தது.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் விழுப்புரத்தில் மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 11:20 மணிக்கு வந்து புனலுாருக்கு மறுநாள் காலை 10:00 மணிக்கு செல்லும். இந்த ரயில்களுக்கு அனுமதி கிடைக்காததால் இயக்கப்படாமல் உள்ளன.
தற்போது கும்ப மேளாவிற்கு ஏராளமான ரயில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் பெட்டிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. கும்பமேளா முடிந்ததும் இந்த இரு ரயில்களையும் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.